Gouthama Siddarthan (from India writing in Tamil)


Red flame lily

Now, time changed into

A red lily flower

The smell of the land hiding

Landmines and

The charring odour of wings

In the frozen sunshine of summer

Are mingling.

Grasshoppers descended

Into the whole of the corn field

Unlike a crow that sits on each crop

And pecks at the grains,

The grasshoppers spread over the furrows

And annihilated the field

The scarecrow howled at the top pitch of voice,

The little fingers fastened to the garland around its neck

Drooping. 

They were gutted fingers of kids;

Fingers rotting in hydrogen bomb attacks;

Fingers of birds, dogs, cats and kids;

And fingers of dolls too

The scarecrow roams about

Like Angulimala,

Wearing the garlands of fingers

I am sitting as a silent witness,

Putting my right fingers upon the left in Bhavana Mudhra.

A dove has fallen at my feet, in a slushy

Pool of blood, wings broken;

As I am about to lift it, gripped by tension,

Angulimala comes rushing in and pouncing,

It chases me as its eyes target my fingers – the fingers in Bhavana Mudhra.

It is running from Europe to Africa;

From Asia to America;

From Australia to Antarctica.

With the garlands of fingers, black, red, white and brown

Swinging and swaying,

It is running madly to catch hold of me. 

(Excerpt of a longer poem)

English translation by Maharathi

****

Notes:

Bhavana: Bhavana is a style of meditation of Lord Buddha, an embodiment of mercy and love.

Angulimala: A myth in the Buddhist lore. Angulimala was said to be a bandit who wore a garland made up of fingers he had cut from the people he encountered. Later, a reformed and repentant Angulimala joined Buddha and turned his disciple.

Maitreya flower : A flower is symbol of mercy.

செங்காந்தள் மலர்

– கௌதம சித்தார்த்தன்

கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட

நிலத்தின் வாசனையும்

சிறகுகள் தீயும்

வெய்யுறை வேனலும் இணைய,

செங்காந்தள் மலராக உருவாக்கிப் பார்க்கிறது

இன்றைய பொழுதின் காலம்.

சோளக்காடெங்கும் சரேலென

வெட்டுக்கிளிகள் இறங்குகின்றன.

ஒவ்வொரு கருதிலும் சிறகடித்துக் கொண்டு

அமர்ந்து மணிகளைக் கொத்தும்

ஒரு காக்கையைப் போல் அல்லாமல்

வயலின் உழவுசால்கள் மீது ஏறியடித்து

நிலத்தை நிர்மூலமாக்குகின்றன.

மரண ஓலத்தைப் பிளந்து கொண்டு வெறிக்கூச்சலிடுகிறது

சோளக்கொல்லை பொம்மை

அதன் கழுத்தில் கோர்த்தணிந்திருக்கும் மாலையில்

தொங்குகின்றன சுண்டுவிரல்கள்.

கருகிப் போன குழந்தைகளின் விரல்கள்,

பெண் குறிகள் கிழிந்த வெண்டை விரல்கள்,

உடல்கள் வெட்டிச் சிதைக்கப்பட்ட போராளி விரல்கள்,

நியூட்ரஜன் குண்டுகளால் அழுகிய விரல்கள்..

பறவைகளின் விரல்கள், நாய்களின், பூனைகளின், குழந்தைகளின் விரல்கள்.

பொம்மைகளின் விரல்களும் கூட.

காட்டுக்குள் இருப்பவரையெல்லாம்

சுண்டு விரல்களை வெட்டி மாலையாய் அணிந்து கொண்டு

அங்குலி மாலாவாய்க் கொன்று திரிகிறது

இடது கைவிரல்கள் மீது வலது கைவிரல்களை வைத்த பாவனையில்

ஒரு மௌன சாட்சியமாக அமர்ந்திருக்கிறேன் நான்.

சிறகொடிந்து ரத்தச் சகதியில் காலடிபற்றி வீழ்கிறது புறா.

பதறியோடி எடுத்து அணைத்துக் கொள்ளும் தருணத்தில்

பாய்ந்து வருகிறது அங்குலி மாலா.

அதன் கண்களில் என் பாவனா விரல்களை குறிவைத்து

வெறி கொண்டு துரத்துகிறது அது,

ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வரை

ஆசியாவிலிருந்து அமெரிக்கா வரை

ஆஸ்திரேலியாவிலிருந்து அண்டார்டிகா வரை

இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை, மியான்மர், வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா,

வட கொரியா, ருவாண்டா, போஸ்னியா, ஆர்மேனியா, செர்பியா,

ரஷ்யா, உக்ரைன், அல்ஜீரியா, சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், ஈராக், லிபியா.. என்று

உலக வரைபடங்கள் மீது ஓடுகிறது அது.

கருப்பு, சிவப்பு, வெளுப்பு, பழுப்பு எனப் பல்வேறு நிறங்களில் கொய்த அங்குலிகள்

மாலையாக அழுகிக் குலுங்க என்னைப் பிடிக்க ஓடிக்கொண்டிருக்கிறது அது.

எனக்கு நிலமில்லை என்கிறது, நான் ஒரு பொய் என்றும், முகமற்றவன் என்றும்,

பறவைகளின் காற்றை சுவாசிக்கக் கூடாது என்றும் சொல்கிறது.

என் இசைப்பாடல்களை எரித்தாகிவிட்டது

என் பெயரை வரலாற்று நூல்களில் இருந்து கிழித்தெடுத்து

கழிவறை உபயோகத்திற்கு வைத்தாகி விட்டது என்றும் கூட.

தோட்டாக்கள் துளைத்த ரத்தம் ஒழுகும் சொற்கள்

முகத்தில் மோதி அறைபடும் திகை கணங்களாய் ஸ்தம்பிக்க,

நான் நின்ற இடத்திலேயே நிற்கிறேன்.

என்னைப் பிடிக்க கடுகி ஓடிக் கொண்டேயிருக்கிறது அங்குலி மாலா.

இந்தக் கண்ணியில் நிகழ்கிறது ஒரு காலவிளையாட்டு :

என் காலம் சமைந்து நிற்க,

அங்குலிமாலாவின் காலம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

காலம் நிகழ்த்திப் பார்க்கும் இந்த விளையாட்டு

முள்ளிவாய்க்கால் கரையில்

நீல நைல் நதியின் கரையிலும், அமேஸானிலும், மிசிசிப்பியிலும்

வோல்காவிலும், மேகாங்கிலும், டாண்பேவிலும், ஜாம்பெஸியிலும்

ஓயாது மலர்கின்ற செங்காந்தள் பூவில்

அமர வரும் வண்ணத்திகளை சிதறடிக்கும் விளையாட்டு அது.

என்னைப் பிடிக்க முடியாமல் நுரை கக்கும் கால்கள் அலறுகின்றன:

“கௌதம, ஓடாதே நில்”

“நான் ஓடவில்லை நீதான் ஓடிக்கொண்டிருக்கிறாய்

முதலில் நீ உன் ஓட்டத்தை நிறுத்து” என்கிறேன் நான்.

தான் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லையென

கர்ஜிக்கின்றன, அதன் கால்களில் பிளந்து உறுமும் ஆயுதங்கள்

அவை உமிழும் எல்லையற்ற கந்தகப் புகை பட்டு

மைத்ரேய மலர் கருகி வீழ்கிறது.

பல்கிப் பெருகி சோள நிலத்தின் கருதுகள் மீது

இருளாகப் பரவும் வேளை

திமிர்த்தெழும்பும் அதன் தானிய மணிகளை

செங்காந்தளாக உருவாக்கிப் பார்க்கிறது காலம்.

காலாதீதமோ

எல்லைகளற்று விரிகிறது

ஒரு புலியின் உடலில் கோடுகளாய் கனன்று கொண்டிருக்கும்

அமரத்துவ சோளக்கருதாக …

*******

குறிப்புகள் :

பாவனா : போருக்கு எதிரான, கருணையே வடிவான புத்தரின் தியான முறை.

அங்குலிமாலா : காட்டிற்குள் எதிர்ப்படுவோரையெல்லாம் வெட்டிக் கொன்று சுண்டு விரல்களை மாலையாக அணிந்து கொண்டிருந்த கொடியவனான அங்குலிமாலா, ஒருநாள் புத்தரை துரத்தி, தோல்வியடைந்து, மனம் திருந்தி புத்தரிடம் சீடனாக சேர்ந்தான் என்பது புத்தர் கதைகளில் வரும் ஒரு தொன்மம்!

மைத்ரேய : கருணையே உருவான மலர்.

Gouthama Siddarthan, is a prominent short story writer, poet, columnist, and critic in modern Tamil literature in southern India. Over the past 30 years, he has garnered numerous critical accolades and has won several prestigious literature prizes. To date, he has published 18 books. He is also the editor of the literature magazine Unnatham. With 40 issues published so far, the magazine primarily focuses on modern literature from around the world. Notably, special editions dedicated to luminaries like Italo Calvino and Milorad Pavić have been featured. One of its recent editions, “The Contemporary Modern Literature Around the World,” was honored as the best magazine of the year in his region in 2018.